தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூர்வீக கோயிலை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை - temple statue damaged

சேலம்: ஏற்காட்டில் மலைவாழ் மக்களின் பூர்வீக கோயில் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதிவாசிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பூர்வீக கோயிலை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பூர்வீக கோயிலை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

By

Published : Jan 20, 2021, 11:39 AM IST

சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்த சாரைக்காடு கிராமத்தின் அருகில் உள்ள வனப்பகுதியில், ஏற்காடு காக்கம்பாடி, போட்டுக்காடு, சமுத்திரக்காடு மற்றும் பெருமாபாளையம் சாரைக்காடு கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு சொந்தமான குட்டப்பெருமாள் கோயில் உள்ளது . இந்தக் கோயிலில்தான் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வருகின்றனர்.

சேதப்படுத்தப்பட்ட கோயில் சிலை

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் பெருமாபாளையம் தாசநாயகன் பட்டியை சேர்ந்த சின்னு மகன் ராமநாதன் என்பவர் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்துள்ளார். பின்பு வேண்டுதல் என்ற பெயரில் இந்த கோயிலின் அருகில் வேறொரு சாமி சிலையை வைத்து வழிபட்டுள்ளார். அதன் பின்னர், அந்த சாமி சிலைக்கு கோயில் காட்டுவதாக சொல்லி அதன் வேலையை தொடங்கியுள்ளார்.

காவல்நிலையத்தில் புகார் அளித்த கிராம மக்கள்

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கிராம மக்கள் இவ்வாறு செய்யக்கூடாது என ராமநாதனை தடுத்து நிறுத்தியதாகவும், இதனையடுத்து, சாமி சிலையை ராமநாதன், அங்கிருந்து தூக்கி வீசிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பூர்வீக கோயிலை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதனால் அந்த மலை கிராம மக்கள் தங்களது குல தெய்வ கோயிலை சேதப்படுத்திய ராமநாதன் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தங்களது கோயிலை மீட்டு தருமாறு ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தனிடம் புகார் அளித்துள்ளனர் .

ABOUT THE AUTHOR

...view details