சேலம்:மத்திய அரசின் திட்டங்களை மக்கள் அறியச் செய்யும் நோக்கில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், ‘மக்கள் ஆசி யாத்திரை’ என்னும் சுற்றுப் பயணத்தை சேலம் மாவட்டத்தில் மேற்கொண்டார். மாவட்டத்தின் மல்லூர் பகுதியில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர் எல். முருகன் பேசுகையில், "சமூகநீதியைக் கடைப்பிடித்து அனைத்துச் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களும் மத்திய அமைச்சராகும் வாய்ப்பினை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். புதிதாகப் பொறுப்பேற்ற நாற்பத்து மூன்று மத்திய அமைச்சர்களும் சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள்.
தமிழ்நாட்டிற்கு மோடி அரசின் எண்ணிலடங்கா திட்டங்கள்
அவர்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துவைக்கும் மரபினை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டம்போட்டு கெட்ட எண்ணத்துடன் நடக்கவிடாமல் செய்துவிட்டனர். மத்திய அமைச்சர்களை நோக்கி மக்கள் செல்லாமல் மக்களை நோக்கி மத்திய அமைச்சர்கள் செல்ல வேண்டுமென பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் நாடு முழுவதும் மக்கள் ஆசி யாத்திரை நடைபெற்றுவருகிறது. மக்களைத் தேடிச் சென்று அவர்களின் குறைகளை மத்திய அமைச்சர்கள் கேட்டு அதனைத் தீர்த்துவைக்கும் பணியைச் செய்துவருகிறார்கள். மத்திய அமைச்சரவையில் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பிரதிநிதித்துவம் அளித்து சமூகநீதிக் காவலராகப் பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்.
காலணி தைப்பவரின் மகனான என்னை அமைச்சராக்கியது மோடிதான் - எல். முருகன் உருக்கம்
தமிழ்நாட்டிற்கு எண்ணிலடங்கா திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்கிவருகிறார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறது.
மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை இல்லை