சேலம் மகுடஞ்சாவடி அருகே உள்ள கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர்( 26). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காக்காபாளையத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கு கிஷோர் (3),சுரேந்திரன் (8 மாதம்) என்ற குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கோமதி (30) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதில் கோமதிக்கு தினேஷ் (10), கந்தசாமி (9) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையில், அவர்கள் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பது கோமதியின் சகோதரி சரசுக்கு தெரியவந்துள்ளது. இதனால் சகோதரிகள் இடையே தகராறு ஏற்பட்டு, சரசு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்திற்கு பின்னர் கோமதியின் உறவினர்கள் சிலர் கோமதியையும், சேகரையும் அழைத்து இருவரும் இனி பேசக்கூடாது, பழகக்கூடாது என்று கண்டித்துள்ளனர்.