தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மண்டல அளவிலான கோ - கோ போட்டி சேலத்தில் தொடக்கம் - regional level Koko

சேலம்: கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் சேலத்தில் இன்று தொடங்கியது.

மண்டல அளவிலான கோ - கோ போட்டி

By

Published : Sep 14, 2019, 6:54 PM IST

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மண்டல அளவிலான கோ - கோ விளையாட்டு போட்டி இன்று தொடங்கியது. இதில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலிருந்து 16 அணியினர் பங்கேற்று விளையாடிவருகின்றனர். கல்லூரி மாணவர்கள் கோ - கோ விளையாட்டில் தங்களது திறனை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இன்றும் நாளையும் நடைபெறும் இப்போட்டியில் தகுதிபெறும் அணியினர், வரும் டிசம்பர் மாதம் கோவில்பட்டியில் நடக்கவிருக்கும் மாநில அளவிலான கோ-கோ விளையாட்டு சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு விளையாடுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

மண்டல அளவிலான கோ - கோ போட்டி

திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கிட, இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது என்று போட்டிகளை நடத்தும் தனியார் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details