தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமண பரிசாக 5 லிட்டர் பெட்ரோல் வழங்கிய உறவினர்! - salem latest news

சேலம் : இன்று திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக வழங்கிய உறவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

v
v

By

Published : Feb 22, 2021, 10:00 PM IST

சேலம் கோட்டைப் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம். இவரின் சகோதரி ஜபூம் நசியா. இவருக்கு முகமது ரகுபதின் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதன்படி இன்று (பிப்.22) சேலம் கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இருவருக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான உறவினர்கள் சூழ திருமணம் செய்துகொண்ட மணமகன், மணமகளுக்கு பல்வேறு வகையிலான பரிசுகளை உறவினர்கள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

திருமண பரிசாக 5 லிட்டர் பெட்ரோல்

திருமண நிகழ்வின் முக்கிய நிகழ்வாக முகமது காசிம் தனது சகோதரிக்கும், மாப்பிள்ளைக்கும் 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக வழங்கினார். இதுகுறித்து கூறிய முகமது காசிம் , 'நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. இது போன்ற விழாக்களில் பரிசாக பெட்ரோல் வழங்கினால் மணமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் 5 லிட்டர் பெட்ரோலினை பரிசாக வழங்கி இருக்கிறேன்' என்று உற்சாகத்தோடு தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details