சேலம் மாவட்டம் ,மேட்டூரில் உள்ள சக்திநகர் பகுதியில் உள்ள மின் வாரிய குடியிருப்பில் ரேஷன் அரிசி கடத்துவதாக மேட்டூர் சார் ஆட்சியர் சரவணனுக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேட்டூர் வட்டாட்சியர் அசின் பானு, வட்ட வழங்கல் அலுவலர் கிரிஜா ஆகியோருடன் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சார் ஆட்சியர் சென்றார்.
வீட்டில் பதுக்கப்பட்ட 800 கிலோ ரேஷன் பொருட்கள் பறிமுதல் - ரேஷன் பொருட்கள் பறிமுதல்
சேலம்: மேட்டூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் பொருட்களை சார் ஆட்சியர் பறிமுதல் செய்தார்.
அப்போது அவர்கள் அங்கிருந்த வீட்டைத் திறந்து பார்த்தபோது உள்ளே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சுமார் 16 மூட்டைகளில் 800 கிலோ எடையுள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் 25,000 ரூபாய் இருக்கும் என்று வட்ட வழங்கல் அலுவலர்கள் தெரிவித்தனர் .
இதைத்தொடர்ந்து பிடிபட்ட ரேஷன் பொருட்கள் அங்கிருந்த லோடு வாகனம் உள்ளிட்டவற்றை சேலம் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.