தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் 1500 கிலோ ரேஷன் பொருட்களை கடத்தல் - சேலம்

சேலம் : 1500 கிலோ ரேஷன் பொருட்களை கடத்தி வந்த லோடு ஆட்டோவை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாரிடம் ஓப்படைத்தனர்.

சேலத்தில் 1500 கிலோ ரேஷன் பொருட்களை கடத்தல்

By

Published : Aug 24, 2019, 8:26 PM IST

சேலம் லீ பஜார் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் வந்த ஆட்டோவை பொதுமக்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த ஆட்டோவிலிருந்து இரண்டு பெண்கள் தப்பி ஓடினர். ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுனர் பிடிபட்டார். உடனே சந்தேகமடைந்த பொதுமக்கள் இது குறித்து சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஆட்டோவை சோதனை நடத்தியதில், சுமார் 1500 கிலோ நியாய விலை கடை பொருட்களான கோதுமை,மக்கா சோளம், அரிசி உள்ளிட்டவற்றை கடத்தி வந்தது தெரியவந்தது.

1500 கிலோ ரேஷன் பொருட்களை கடத்தி வந்த லோடு ஆட்டோவை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாரிடம் ஓப்படைத்தனர்.

பின்னர் ஆட்டோ ஓட்டுனரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், சேலம் அரிசிபாளையம் ரத்தினசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாயகி என்பவருக்கு சேலம் சரக்கு மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து ரேஷன் பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. உடனே ஆட்டோ மற்றும் ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு போலீசார் எடுத்துச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details