தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்துகள் சாலையில் ஓடுவதே ஆபூர்வமாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி கிண்டல்! - எடப்பாடி பழனிசாமி

அரசுப்பேருந்துகளை சரியாக கவனிப்பதில்லை எனவும்; பேருந்துகள் சாலையில் ஓடுவதே ஆபூர்வமாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் சாலையில் ஓடுவதே ஆபூர்வமாக உள்ளது  - எடப்பாடி பழனிசாமி
பேருந்துகள் சாலையில் ஓடுவதே ஆபூர்வமாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி

By

Published : May 13, 2022, 5:12 PM IST

சேலம் : பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மையத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், 'ஒவ்வொரு பேச்சுவார்த்தையின்போதும் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதியம் உயர்த்தப்படுவது வழக்கம் தான். ஆனாலும், நிர்வாகத்தை திறமையினால் அதனை சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும். அதிமுக ஆட்சியின்போது நிர்வாகத் திறமையாக செயல்பட்டதால் தான் நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்க முடிந்தது.

அதிமுக இருந்துபோதுதான் 14000 பேருந்துகள் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டன. அதனால் தான் தற்போது திமுக பேருந்துகளை இயக்க முடிகிறது. பேருந்துகளின் ஆயுட்காலம் தற்போது 9-லிருந்து 12ஆண்டுகளாக உயர்த்தியுள்ளார்கள். தற்போது நஷ்டத்தில் இயங்கும் துறையாகத்தான் அரசு போக்குவரத்துத்துறை உள்ளது.

பேருந்துகள் சாலையில் ஓடுவதே ஆபூர்வமாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி

அதனால் தான் அதனைக்கண்டுகொள்வதில்லை. அரசுப் பேருந்துகளை சரியாக கவனிப்பதில்லை. பேருந்து சாலையில் ஓடுவதே ஆபூர்வமாக உள்ளது’ எனப் பேசினார்.

இதையும் படிங்க :முதலமைச்சர் அறிவிப்புகள் யானைப் பசிக்கு சோளப் பொறி போன்றது' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details