சேலம்:இதுகுறித்து சேலம் மாவட்ட வனத்துறை அலுவலர்கள் கூறுகையில் ,'”சேலம் மாவட்டத்தில் காப்பு காடுகள் 115494.537 ஹெக்டர் பரப்பளவும் மற்றும் காப்பு நிலங்கள் 9268.420 ஹெக்டர் பரப்பளவும் ஆக மொத்தம் 124762.957 ஹெக்டர் பரப்பளவில் வனங்கள் உள்ளன.
இக்காப்புக்காடுகளில் யானை, காட்டுமாடு, கரடி, மான், முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, குரங்குகள், மலைப்பாம்பு, மயில் உள்ளிட்ட பல்வேறு வகையான வன உயிரினங்கள் மற்றும் பல்வேறு பறவையினங்கள் வாழ்விடமாகக் கொண்டு வசித்து வருகின்றன.
சேலம் வன மண்டலம், சேலம் வனக்கோட்டத்திற்குட்பட்ட சேர்வராயன் தெற்கு வனச்சரகம், சேர்வராயன் வடக்கு வனச்சரகம், டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, ஆத்தூர், வாழப்பாடி, தம்மம்பட்டி, கல்வராயன் ஆகிய 9 வனச்சரகங்களை உள்ளடக்கியது.
இந்த வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடு மற்றும் காப்பு நில வனப்பகுதிகளில் , 40 வனப்பணியாளர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் 83 பேர் அடங்கிய சேலம் இயற்கை குழு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், ஆகியோர் 16 குழுக்களாக பிரிக்கப்பட்டு கடந்த 2021 பிப்ரவரி 17 ம் தேதி முதல் பிப்ரவரி 19 ம் தேதி வரை 2021 ஆம் ஆண்டுக்கான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பறவைகள் கணக்கெடுப்பின் போது சேலம் மாவட்ட வனங்களில் மொத்தம் 225 வகையான பறவையினங்கள் உள்ளன. இதில் சேலம் மாவட்டத்தை வழியாக கொண்ட 175 வகையான இனங்களும், வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் வாழும் 49 இனங்களும் மற்றும்
பொதுவாக தெற்காசிய நாடுகளில் காணப்படும் செம்மஞ்சள் மார்பு பச்சைப்புறா ( Orange breasted Green Pigeon) என்ற புதிய வகை பறவையினமும் கண்டறியப்பட்டது.