தமிழ்நாடு

tamil nadu

அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம்: ரஜினிகாந்த் கருத்துக்கு வரவேற்பு

By

Published : Mar 12, 2020, 5:09 PM IST

சேலம்: அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் என்ற ரஜினியின் கருத்துக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பளித்து, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

rajinikanth-fans-
rajinikanth-fans-

நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்க சென்னை தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் பேசிய அவர்,' 2017 டிசம்பர் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவேன் என்று முதலில் அறிவித்தபோது, இங்கு சிஸ்டம் சரியில்லை என்றேன். எனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை. ஒரு நல்ல ஆட்சியை வழங்க வேண்டும் என்றால், இங்கு முதலில் அரசியல் மாற்றம் வேண்டும். அதுதான் ஒரு நல்ல ஆட்சிக்கு வழிவகுக்கும்.

தமிழ்நாட்டு மக்களிடம் அரசியல் மாற்றம் குறித்து எனது ரசிகர் மன்றத்தினர் பரப்புரை செய்து அவர்களிடம் எழுச்சியை உருவாக்க வேண்டும். நான் அரசியலுக்கு வருவது, பெயருக்காகவோ, புகழுக்காகவோ இல்லை. எனது நோக்கத்தை தமிழ்நாடு மக்கள் புரிந்துகொண்டு அரசியல் மாற்றத்திற்கும், ஆட்சி மாற்றத்திற்கும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது' எனத் தெரிவித்தார். அவரின் கருத்துக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பளித்து கொண்டாடிவரும் நிலையில், சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர், அவரின் கருத்தை வரவேற்று பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

ரஜினி கருத்துக்கு வரவேற்பு

இதுகுறித்துப் பேட்டியளித்த சேலம் ரசிகர் மன்றத்தினர், "ரஜினிகாந்தின் கருத்துக்கு அவரது ரசிகர் மன்றத்தினர், முழு ஆதரவும் ஒத்துழைப்பும் தருவோம். எனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை என்று அவர் கூறியது வருத்தம் அளிக்கிறது என்றாலும் அவர் கூறியபடி செயல்படுவோம்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:அரசியல் பிரவேசம் குறித்த ரஜினியின் அசத்தல் பேச்சு - வீடியோ

ABOUT THE AUTHOR

...view details