தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினி மக்களையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றி வருகிறார்- பெங்களூர் புகேழேந்தி - bangalore pugalenthi

சேலம்: ரஜினி திரைப்பட வெளியீட்டின்போது மட்டுமே அரசியல் பேசிவருகிறார் என்றும் அவர் கட்சி தொடங்காமால் நீண்ட காலமாக மக்களையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றி வருகிறார் என்று அமமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ammk former member pugalenthi  rajini cheat the pepole and his fans  சேலம் மாவட்டச் செய்திகள்  அமமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி  ரஜினி கட்சி தொடங்கமாட்டார்  பெங்களூர் புகழேந்தி  bangalore pugalenthi  rajini cheat his fans
ரஜினி மக்களையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றி வருகிறார்- பெங்களூர் புகேழேந்தி

By

Published : Dec 17, 2019, 3:48 PM IST

சேலம் விமான நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்றும் கூடிய விரைவில் அதிமுகவில் இணையப்போவதாகவும் தெரிவித்தார்.

கர்நாடகவில் பேருந்து நடத்துனராக இருந்த ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டாராக மாறிய அதியசம் தமிழ்நாட்டில் தான் நடந்தது. தமிழை தெளிவாகப் பேசத் தெரியாதவர்கள் கூட உயர்ந்த இடத்திற்கு செல்வதும் இங்குதான் நிகழ்கிறது. அடுத்தடுத்து வரும் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகும் அதிசயமும் தமிழ்நாட்டில் நிகழத்தான் போகிறது.

அதுவரை ரஜினி கட்சி தொடங்கப்போவதில்லை நீண்ட காலமாக அவர் திரைப்பட வெளியீட்டின்போது மட்டுமே அரசியல் பேசுகிறார். இதன் மூலம் மக்களையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றிவருகிறார். சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாகவே எப்பொழுதும் இருப்பேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஜினி மக்களையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றி வருகிறார்- பெங்களூர் புகேழேந்தி

குடியுரிமை திருத்தச்சட்டத்தினால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டால் முதலமைச்சரும் அதிமுக அரசும் ஏற்றுக்கொள்ளாது. வடகிழக்கு மாநில மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து குடியுரிமைச்சட்டத்திருத்ததில் உரிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமை மசோதா: அதிமுக அரசு தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் - கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details