தமிழ்நாடு

tamil nadu

பயணிகள் கவனத்திற்கு.. சேலம் - கோயம்புத்தூர் ரயில் சேவை மே 31 வரை ரத்து!

By

Published : May 16, 2023, 5:30 PM IST

ரயில்வே பாதை பணி காரணமாக சேலம் - கோயம்புத்தூர், கோயம்புத்தூர் - சேலம் ரயில் சேவைகள் மே 31 வரை ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர்.

சேலம் - கோயம்புத்தூர் ரயில் சேவை மே 31 வரை ரத்து
சேலம் - கோயம்புத்தூர் ரயில் சேவை மே 31 வரை ரத்து

சேலம்: ரயில்வே கோட்டத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் செல்கின்றது. ரயில்வே பாதையின் பராமரிப்புப் பணிகள் நடைபெறும்போது சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டும் சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளப் பாதையில் பராமரிப்புப் பணிகள் தற்போது நடைபெற உள்ளன.

இதன் காரணமாக சில ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கோவையில் இருந்து காலை 9.05 மணிக்கு புறப்படும் கோவை - சேலம் செல்லும் பாசஞ்சர் ரயில் (வண்டி எண் 06802) மற்றும் சேலத்தில் இருந்து மதியம் ரயில்வே நேரப்படி 13.40 மணி அதாவது 1.40 மணிக்கு புறப்படும் சேலம் - கோவை செல்லும் பாசஞ்சர் ரயில் (வண்டி எண் 06803) இன்று முதல் வருகிற மே 31 ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் வழக்கம் போல் அனைத்து ரயில்கள் இயக்கப்படும் என்றும் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க:"சிபிஐ அதிகாரிகள் சொத்துகளை சரியாக மதிப்பிடவில்லை" - சிறப்பு நீதிமன்றம் அதிருப்தி!

ABOUT THE AUTHOR

...view details