தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் உட்பட 14 கட்சித் தலைவர்கள் பரப்புரை - campaigned propaganda at salem meeting

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்பட கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொள்கின்றனர்.

rahul gandhi, stalin and 14 party leaders campaigned propaganda at salem meeting
rahul gandhi, stalin and 14 party leaders campaigned propaganda at salem meeting

By

Published : Mar 28, 2021, 9:54 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகளை இறுதி செய்ய இரு முறை தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி, தொகுதிப் பங்கீட்டிற்கு பின் இன்று தான் தமிழ்நாட்டிற்கு வருகிறார்.

தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி காரணமாக ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வரவில்லை எனப் பல கருத்துகள் எழுந்த நிலையில், இன்று (மார்ச்.28) தமிழ்நாட்டிற்கு வரும் ராகுல், தேர்தல் பரப்புரையிலும், சேலம் மாவட்டத்தில் நடைபெறும் திமுக தலைமையிலான பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட 14 கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்

ABOUT THE AUTHOR

...view details