சேலம்: ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர், ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து கேள்விக்கு பதில் அளித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்தை வெளியிட்டார் எனக்கூறி, குஜராத் எம்.எல்.ஏ ஒருவர் சூரத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்த நீதிமன்றம், அதுவரை தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தது. அதைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கம் செய்யப்படுவதாக நாடாளுமன்ற மக்களவை செயலகம் அறிவித்தது.
மக்களவை செயலகம் வெளியிட்ட அறிவிப்பில் ‘அரசியலைமைப்புச் சட்டத்தின் 102(1) e விதிகளின் படி, தண்டனை விதிக்கப்பட்ட தேதியிலிருந்து அதாவது 23 மார்ச் 2023 முதல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், "நான் சூரத் நகரில் இருந்து வந்திருப்பதால் இதற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும். சூரத் நகரில் மோடி சமுதாயத்தினர் எண்ணற்றவர்கள் உள்ளனர்.