தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் தங்கும் விடுதியில் ராகிங்: ஆட்சியரிடம் மாணவிகள் புகார் - சேலம் தங்கும் விடுதியில் ராக்கிங்

சேலத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் ராகிங் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலாமாண்டு மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

தங்கும் விடுதியில் ராக்கிங்
தங்கும் விடுதியில் ராக்கிங்

By

Published : Dec 3, 2021, 10:55 PM IST

சேலம்: சங்கர் நகர் பகுதியில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.

இந்த விடுதியில் 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கி, சேலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதியில் தங்கிப் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவிகள் சிலர் முதலாம் ஆண்டு மாணவிகளை ராகிங் செய்து தினமும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் எழுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக மாணவிகள் பொன்மலர் செல்வி, கோகுலப்பிரியா கூறுகையில், "தினமும் இரவு நேரத்தில் பாடவும் ஆடவும் கூறி துன்புறுத்துகின்றனர். சிலர் சீனியர் மாணவிகள் இரவு நேரத்தில் அறைகளின் கதவை தட்டித் தொல்லை செய்கின்றனர்.

தங்கும் விடுதியில் ராக்கிங்

தங்கும் விடுதியில் ராக்கிங்

படிக்கும் நேரத்தில் வேலைகள் செய்ய வைத்து கொடுமை செய்கின்றனர். அவர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

தங்கும் விடுதியில் ராகிங்

இதனையடுத்து சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சம்பந்தப்பட்ட மாணவியர் தங்கும் விடுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

கடும் நடவடிக்கை

இதுபோன்ற ராகிங் ஒழுங்கீன செயலில் சீனியர் மாணவிகள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:12 எம்பிக்கள் சஸ்பெண்ட், மாநிலங்களவை ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details