தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அழைத்தார்கள்... சந்தித்தேன்; இணைந்துகொண்டேன்! ராதாரவி 'பளீச்' - திமுக

சேலம்: நாடக நடிகர்கள் வாக்குக்கு பணம் வாங்காமல் நேர்மையாக, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ராதாரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

File pic

By

Published : Jun 13, 2019, 7:12 PM IST

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும் பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியினருக்கு ஆதரவு கேட்டு, சேலம் நாடக நடிகர் சங்க உறுப்பினர்களை சந்திக்க ராதாரவி இன்று (ஜூன் 13) சேலம் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ராதாரவி கூறுகையில், 'தேர்தல் நேரத்தில் மட்டுமே நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் நாடக நடிகர்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அவர்களை சந்திக்காமல் தவிர்த்தார்.

இந்த நேரத்தில் எல்லா நாடக நடிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது எல்லாம் பணம் வாங்காமல் வாக்களியுங்கள். பாக்யராஜ் அணியினரை வெற்றிபெறச் செய்யுங்கள்.

நடிகர்களுக்கு முதியோர் இல்லம் தேவை இல்லை. அவர்களை கவனித்துக் கொள்வது அவர்களின் பிள்ளைகளின் பொறுப்பு. அவர்களுக்கு உரிய உதவியை நாம் செய்தாலே போதும். விஷால், ஆர்யா, கார்த்தி ஆகியோர் படம் நடித்து நடிகர் சங்கத்தை கடனிலிருந்து மீட்போம் என்றார்கள். ஆனால் அப்படி ஏன் நடக்கவில்லை. ஆகவே புதிய தலைமை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குத் தேவை' என்று தெரிவித்தார்.

ராதாரவி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராதாரவி கூறியதாவது, ஒரு நடிகை குறித்து ஏதோ நான் சொன்னதாக தகவல் திமுக தலைமைக்கு தவறாக சென்று உள்ளது. அது குறித்து திமுக தலைவர் எதுவும் என்னிடம் கேட்கவில்லை.

ராதாரவி பேட்டி

வேறு யாரோ ஒருவர் என்னிடம் ராதாரவி கூட்டத்திற்கு யாரும் செல்லக் கூடாது என்று திமுக தொண்டர்களுக்கு தலைமை அறிவுறுத்தி உள்ளது.

ஆகவே மரியாதை இல்லாத இடத்தில் இருக்கக் கூடாது என்று அதிமுகவில் சேர்ந்து கொண்டேன். ஏற்கனவே அதிமுகவில் 18 காலம் நான் இருந்திருக்கிறேன். பல பொறுப்புகள் வகித்துள்ளேன். முதலமைச்சரை சந்திக்க பலமுறை விருப்பம் தெரிவித்து இருந்தேன். நேற்று என்னை அழைத்தார்கள்... சந்தித்தேன்; அதிமுகவில் இணைந்து கொண்டேன். தலைமை குறித்து கருத்து சொல்லக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார்கள். அதனால் அது குறித்து நான் எதுவும் கூற இயலாது. அதிமுகவிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details