தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூத்தது பூ ஒன்று: சேலத்தில் இரவில் மலர்ந்த அரியவகை பூ! - brahma kamalam flower news

சேலம்: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அரியவகை மலரான பிரம்ம கமலம், சேலத்தில் மாடி வீட்டுத் தோட்டத்தில் அழகாகப் பூத்து இருப்பதைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

பூத்தது பூ ஒன்று...சேலத்தில் இரவில் மலர்ந்த அரிய வகை பூ!
பூத்தது பூ ஒன்று...சேலத்தில் இரவில் மலர்ந்த அரிய வகை பூ!

By

Published : Dec 13, 2020, 1:08 PM IST

சேலம் நான்கு ரோடு மெய்யனூர் பகுதியில் வசிக்கும் தீனதயாளன் - மீனா தம்பதியினர் வீட்டில் பிரம்ம கமலம் மலர்ச்செடியை வளர்த்துவருகின்றனர். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த அரியவகை மலரான பிரம்ம கமலம் பூ நேற்று (டிச. 12) பூத்துள்ளது.

அதிசய பிரம்ம கமலம் பூ இரவில் மட்டுமே மலர்ந்து, சூரிய உதயத்திற்கு முன் வாடிவிடும் தன்மைகொண்டது. ஆண்டிற்கு ஒருமுறை இரவு 8 மணிக்கு தொடங்கி நன்றாக விரிந்து முழுமையாக காட்சி தரும் மலரானது. விடியற்காலை தொடங்குவதற்குள் சுருங்கி மொட்டு வடிவில் மாறிவிடும்.

பூத்தது பூ ஒன்று: சேலத்தில் இரவில் மலர்ந்த அரியவகை பூ!

வெள்ளை நிறத்தில், நட்சத்திர வடிவில் பெரிய அளவில் இருக்கும் இந்த அரியவகை பிரம்ம கமலம் மலரை, அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து, பார்த்துச் சென்றனர்.

இதையும் படிங்க...உத்திரமேரூரில் பழங்கால கோயிலில் 1 கிலோ தங்கப் புதையல் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details