தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காங்கிரஸ் ஆட்சியை பாஜக கவிழ்த்தது அசிங்கமான செயல் - நாராயணசாமி ! - சேலத்தில் நாராயணசாமி

புதுச்சேரி : காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது அநாகரிகமான செயல் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Puducherry former cm Narayana samy bite at salem
Puducherry former cm Narayana samy bite at salem

By

Published : Feb 24, 2021, 7:39 AM IST

சேலத்தில் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க கிரண்பேடி மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆளுநர் கிரண்பேடி மூலம அரசுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுக்கப்பட்டன. இதனை தாண்டி வெற்றிகரமாக 5 ஆண்டுகால ஆட்சியை காங்கிரஸ் நிறைவு செய்துள்ளது.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக, புதுச்சேரி மாநில அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் மிரட்டி ஆட்சி கவிழ்ப்பு வேலையை செய்திருப்பது அநாகரிகமாக உள்ளது. இந்த ஆட்சி கவிழ்ப்பு சதியில் அதிமுகவும் உள்ளது என்பது வெட்கக்கேடானது.

பிரதமர் மோடியைப் பார்த்து ஒருபோதும் அச்சமில்லை. நாராயணசாமி ஊழல் செய்தார் என நிரூபிக்க முடியுமா? விளம்பரங்கள், இலவசங்கள் மூலமாக மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து விடலாம் என அதிமுக நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுபவர்களுக்கு தான் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பதை அதிமுக உணரவில்லை. தமிழ்நாட்டில் அரசின் கடன் சுமை அதிகரிக்க அதிமுக அரசின் நிர்வாகத் திறமை இன்மையே காரணம்." எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details