தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் குவாரி ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்! - Salem MP SR Parthiban

சேலம்: செட்டிச்சாவடியில் உள்ள குவாரியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(பிப். 25) அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் பொதுமக்கள் சாலை மறியல்
சேலம் பொதுமக்கள் சாலை மறியல்

By

Published : Feb 26, 2021, 12:04 PM IST

சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள செட்டிச்சாவடியில் உள்ள நெல்லியாகரடு கிராமத்தில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பச்சைக் கல் நிரம்பிய குவாரி உள்ளது. இந்த குவாரியை ஏலம் விடுவதற்காக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு விடுத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் குவாரி ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கன்னங்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதற்கிடையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன் செட்டிச்சாவடியில் உள்ள குவாரியை ஏலம் விடுவதால் ஆயிரம் குடும்பத்தினர் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் எனவும் ஏலத்தை ரத்து செய்து குவாரியை அரசே எடுத்து நடத்தினால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் எனவும் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details