தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி மதுபானங்கள் விற்பனை! தேசிய நெடுஞ்சாலையில் மறியல் - கள்ளத்தனமாக விற்பனை

சேலம்: குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதை கண்டித்துப் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

By

Published : Feb 9, 2019, 8:03 PM IST

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜாகிர் அம்மாபாளையம் காளியம்மன் கோயில் தெருவில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாக போலீசாரிடம் பல முறை கூறியும் அது தொடர்பான எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் செய்வதறியாமல் தவித்தனர். இதையடுத்து இன்று அந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சேலம் - பெங்களூரு சாலையில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

இது தொடர்பாக பொதுமக்களிடம் கேட்ட போது, " சந்து கடைகள் அமைத்து 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் மது அருந்திவிட்டு சாலையில் போகும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்கின்றனர். இந்த கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களை குடித்துவிட்டு பலர் இறந்தும் போயிருக்கின்றனர். இது இந்த பகுதி மக்களை அமைதி இழக்கச் செய்துள்ளது. கள்ளத்தனமாக மதுபானத்தை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும், அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும்" என்று கூறினார்கள். இதையடுத்து சாலை மறியல் நடக்கும் இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இவ்வாறு மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆறு வீடுகளில் சுமார் ரூ.6லட்சம் மதிப்புள்ள போலி மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details