கேரள காட்டுப்பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் மணிவாசகம் (57). இவரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகர். மணிவாசகம் கேரள காட்டுப்பகுதியில் சிலருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வந்ததாகவும், அப்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து மணிவாசகத்தின் தங்கை லட்சுமிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நேற்றுமுன் தினம் கேரளா சென்று மணிவாசகத்தின் உடலைப் பெற்று சொந்த ஊருக்கு கொண்டு வந்தார். இந்நிலையில், ராமமூர்த்தி நகர் பொதுமக்கள் ஒன்றுகூடி மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் சடலத்தை ஊருக்குள் கொண்டு வரக் கூடாது என முடிவு செய்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.