தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கனிமவள தாதுக்களை கொள்ளையடிக்கவே 8 வழிச்சாலைத் திட்டம்!' - salem

சேலம்: கஞ்சமலையில் கனிம தாதுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காகவே சேலத்திலிருந்து சென்னைக்கு எட்டு வழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டதாக பொதுமக்கள்  குற்றம்சாட்டுகிறார்கள்.

எட்டு வழி சாலை திட்டம்  கஞ்ச மலையில் உள்ள கனிம தாது பொருட்களை எடுத்து செல்வதற்காகவே - பொதுமக்கள் குற்றச்சாட்டு

By

Published : Aug 22, 2019, 7:56 AM IST


சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது கஞ்சமலை. இந்த மலையில் கனிமவளங்கள் அதிகளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சேலத்திலிருந்து சென்னைக்கு எட்டு வழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டதற்கு காரணம், இந்தக் கஞ்ச மலையில் உள்ள கனிம தாதுப் பொருட்களை எடுத்து செல்வதற்காகவே என்ற குற்றச்சாட்டும் நிலவிவருகிறது.

இந்நிலையில், கஞ்சமலை அடிவாரப் பகுதியில் உள்ள நிலங்களை அளக்கும் பணியில் வருவாய்த் துறையினர் திடீரென ஈடுபட்டதால் பொதுமக்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

எட்டு வழிச்சாலைத் திட்டம் -பொதுமக்கள் குற்றச்சாட்டு

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "கடந்த நான்கு தலைமுறையாக இந்தப் பகுதியில் வசித்துவருகிறோம். விவசாயம் செய்தும் ஆடு மாடுகளை மேய்த்து வருவாயை தேடிவரும் நிலையில் தற்போது திடீரென தங்களின் நிலங்களை அளவீடு செய்து வருகின்றனர். எட்டு வழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே இந்த நிலங்களை அளவீடு செய்வதற்கு மாவட்ட நிர்வாகமும் ஆளுங்கட்சியினரும் முனைப்புக் காட்டிவருகின்றனர்.

மேலும் ஏற்கனவே நிலம் அளக்க எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், தற்போது ஆளுங்கட்சியினர், காவல் துறையினரின் துணையோடு எங்களை மிரட்டி இதுபோன்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். கனிம வளமிக்க இந்த கஞ்சமலையில் உள்ள இரும்பு தாதுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காகவே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.

எட்டு வழிச்சாலைத் திட்டம் கஞ்ச மலையில் உள்ள கனிம தாதுப் பொருட்களை எடுத்து செல்வதற்காகவே- பொதுமக்கள் குற்றச்சாட்டு

திடீரென வெளியேற வேண்டும் என்றால், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவிக்கும் மக்கள், இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய விளக்கம் அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details