தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

20 ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த கோயில் திருவிழாவை நடத்த கோரிக்கை - வட்டாட்சியர், கோட்டாட்சியரிடம் மனு

சேலம்: சின்ன புதூர் பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த, கோயில் திருவிழாவை நடத்தக்கோரி பொதுமக்கள் வட்டாட்சியர், கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

public-demand-for-temple-festival-after-20-years
public-demand-for-temple-festival-after-20-years

By

Published : Mar 17, 2020, 12:14 PM IST

சேலம் மாவட்டம் சின்ன புதூர் பகுதியில் சுமார் நூறாண்டு பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. கடந்த 2000-ஆவது ஆண்டு இக்கோயிலில் நடைபெற்ற திருவிழாவின்போது, இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக கடந்த 19 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இக்கோயில் திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதிக்கக்கோரி சின்ன புதூர், பெரிய புதூர், மிட்டா புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வட்டாட்சியர், கோட்டாட்சியர் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இருதரப்பினருக்கும் உள்ள முன்விரோதம் காரணமாக கோயில் திருவிழா நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் அலுவலர்களிடம் மனு அளித்துள்ளனர்.

கோயில் திருவிழாவை நடத்த பொதுமக்கள் கோரிக்கை

இதனையடுத்து, வட்டாட்சியர், கோட்டாட்சியர் இணைந்து பொதுமக்களிடம் திருவிழா குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், மேலும் திருவிழா நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தனர்.

மேலும் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இக்கோயிலின் திருவிழா நடைபெற்று கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகின்றன எனவும், இதனால் தங்களுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், அலுவலர்கள் வெகு விரையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மக்களை அச்சுறுத்தும் காட்டெருமை

ABOUT THE AUTHOR

...view details