தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதன் தான் எங்களுக்கு மோட்டிவேஷன் - திரண்ட இளைஞர் பட்டாளம் - pubg madhan fans

பப்ஜியில் ஆபாசத்தை அள்ளித்தெளிக்கும் மதனுக்கு ஆதரவாக அவரது வீட்டிற்கு முன்பு, இளைஞர்கள் பட்டாளமே திரண்டு இருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

pubg
மதன்

By

Published : Jun 19, 2021, 10:29 AM IST

சேலம்: பெண்கள், குழந்தைகள் குறித்து ஆபாசமாகப் பேசி பப்ஜி விளையாட்டை தனது யூ-ட்யூபில் வெளியிட்டு வந்ததற்காக பப்ஜி மதன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரியில் மதிகோன்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை, தனிப்படையினர் கைது செய்து நேற்று சென்னை அழைத்து வந்தனர்.

அவரது மனைவி கிருத்திகா, ஏற்கெனவே மதனின் யூ-ட்யூப் பக்கத்திற்கு நிர்வாகியாக இருந்த காரணத்திற்காக முன்னரே கைது செய்யப்பட்டிருந்தார்.

மதனைக் காண திரண்ட ரசிகர்கள்

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மகன், விசாரணைக்காக சேலத்தில் சீரங்கன் புதுத்தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரவுள்ளதாகத் தகவல் பரவத் தொடங்கியது.

இதையடுத்து அவரைக் காண நூற்றுக்கணக்கான இளைஞர்கள், அவரது வீட்டிற்கு முன்பு திரண்டனர்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிர்ச்சி

மதன், கிருத்திகா கைது செய்யப்பட்ட விவகாரம், அவரது அண்டை வீட்டாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதன் வீட்டுக்கு முன்பு திரண்ட இளைஞர் பட்டாளம்

இவர்கள் இப்படியா?

பார்ப்பதற்கு நல்லவராகவும், அமைதியாகவும் இருந்து வரும் மதன், கிருத்திகா, இச்செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதை கேட்கும் போது, கேவலமாகவும், அதிர்ச்சியாகவும் இருப்பதாகவும் தங்களது ஆதங்கத்தை அப்பகுதியினர் கொட்டுகின்றனர்.

மதன் தான் எங்களுக்கு மோட்டிவேஷன்

ஆனால், அவரது ரசிகர்களாக பப்ஜி மதனுக்கு போர்க்கொடி தூக்கிக்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கூறுகையில், "பப்ஜி மதன் மீண்டும் ஆன்லைன் கேம் ஆட வேண்டும், அவரின் பேச்சு எங்களுக்கு மோட்டிவேஷன் ஆக உள்ளது.

ஆபாசமாகப் பேசியது தவறுதான். அவரை மன்னித்து விடுங்கள். இளைஞருக்கு வழிகாட்டியாக அவர் திகழ்கிறார்" எனத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:பப்ஜி மதனின் கேலி... பதிலுக்கு காவல் துறை சொன்னது என்ன?

ABOUT THE AUTHOR

...view details