தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதியோரை குறிவைக்கும் கொலையாளிக்கு போலீஸ் வலை...! - பணத்தை பறித்து செல்லும் சைக்கோ

சேலம்: சாலையோரம் உறங்கும் முதியோரை கொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் கொலையாளியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Psycho killer targeting the elderly - Police search
Psycho killer targeting the elderly - Police search

By

Published : Feb 5, 2020, 10:22 AM IST

சேலம் காசகாரனூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் டயர் விற்பனை நிலையம் வாயில் முன்பு இரண்டு வருடங்களாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இரவில் படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் டயர் விற்பனை நிலையம் வாயிலில் உறங்கிக் கொண்டிருந்த முதியவர் தலையில், அடையாளம் தெரியாத ஒருவர் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன் தினம் (பிப். 03) இரவு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த முதியவரை கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த பணத்தையும் அந்த அடையாளம் தெரியாதவர் எடுத்துச் சென்றார்.

அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களை தொடர்ந்து, கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து சேலம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சாலையோரம் உறங்கும் முதியோர்களை கொலை செய்துவிட்டு அவரிடமிருந்து பணத்தை எடுக்கும் சிசிடிவி காட்சிகளை தற்போது காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மாநகர் முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

முதியவர்களை குறிவைத்துக்கொல்லும் சைகோ கொலையாளி

இதையும் படிங்க: ரூ.3 லட்சம் மதிப்புள்ள 30-க்கும் மேற்பட்ட சில்வர் ஓக் மரங்கள் கடத்தல்!

ABOUT THE AUTHOR

...view details