தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை பாதுகாப்புச் சட்டம் இயற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் - சாலை பாதுகாப்புச் சட்டம் இயற்றக்கோரி கண்டன ஆர்பாட்டம்

சேலம்: சாலை விபத்துகளை குறைக்க தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

protest in salem to bring Road Safety Act
protest in salem to bring Road Safety Act

By

Published : Jan 29, 2020, 4:49 PM IST

தமிழ்நாட்டில் அன்றாடம் சாலை விபத்துகள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலத்தில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.

இதுபோன்ற விபத்துகளை குறைக்க வலியுறுத்தி தமிழ் பண்பாட்டு கழகத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை விபத்துகளை குறைக்க தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ஏற்றவேண்டும் எனவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ள சாலைகளில் மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் சாலை விபத்துகளிலிருந்து மக்களை காக்க தமிழ்நாடு சாலை பாதுகாப்பு படை என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் அதில் 50 ஆயிரம் சாலை பாதுகாப்பு படை வீரர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பண்பாட்டு கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தமிழ் சாலை பண்பாட்டு கழகத்தினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயில் வழி சுவர்: ஓவியம் வரைந்த மாணவர்கள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details