சேலம் மாவட்டம் பெரமனூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கல்லூரி மாணவிகளை வைத்து விபாசாரம் நடத்தப்படுவதாக அஸ்தம்பட்டி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் அண்மையில் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில், ஆத்தூரைச் சேர்ந்த சுதா(32), வாழப்பாடியைச் சேர்ந்த குமார்(32) ஆகிய இருவரும் புரோக்கர்களாக இருந்து, மாணவிகள் உட்பட நான்கு இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது.