சேலம்:எடப்பாடி அடுத்த ஜலகண்டபுரம், வண்டிமேடு பகுதியில் அரசு மருத்துவமனை பின்புறம் குடியிருப்புகள் உள்ளன. அங்கு சுருட்டுக்கடை ஜான் என்பவரின் வீட்டில் சட்டவிரோதமாக கேரளா மாநில மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துவருகின்றனர். லாட்டரி சீட்டு வாங்க, வாடிக்கையாளர்கள், தினமும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
தமிழ்நாடு அரசு, லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்துள்ள நிலையிலும், ஜலகண்டபுரம் பகுதிகளில் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருவது குறித்து, மக்கள் ஜலகண்டபுரம் காவல் நிலையதில் பலமுறை தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.