கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முத்துவேல் என்பவர், மனைவி, மாமியாரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்,
சேலம் அரசு மருத்துவமனையில் கைதி தற்கொலை! - Prisoner commits suicide at Salem Government Hospital
சேலம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருத்த கைதி ஒருவர், மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்
அண்மையில், சிறை வளாகத்தில் முத்துவேல் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சிறைத் துறையினர் அனுமதித்திருந்தனர். இந்நிலையில், இன்று(ஜன-27) அதிகாலை கழிவறைக்கு சென்ற முத்துவேல், அங்கிருந்து ஜன்னல் வழியாக இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.