தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாக்கடை கால்வாயில் மயங்கி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு!! - சேலம் மாவட்ட செய்தி

சேலத்தில் சாக்கடை கால்வாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 31, 2023, 8:47 PM IST

சாக்கடை கால்வாயில் மயங்கி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு!!

சேலம்: அதிகாரிப்பட்டி அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி(25), நூல் தயாரிப்பு ஆலையில் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா(22). இருவருக்கும் திருமணமாகி ஒரு ஆண்டு ஆன நிலையில் சந்தியா 4 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் முன்பாக உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது சந்தியாவுக்கு தலை சுற்றி வாந்தி வந்துள்ளது.

இதனையடுத்து அவர் சாக்கடை கால்வாய் ஓரமாக நின்று வாந்தி எடுத்துள்ளார்‌. அப்போது எதிர்பாராத விதமாக சந்தியா மயக்கம் அதிமாகி சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்துள்ளார். இதனால் அவரின் சுவாசக்குழாய், நுரையீரல் உள்ளிட்ட உள் உறுப்புக்களில் சாக்கடை கழிவு நீர் புகுந்துள்ளது.

இந்நிலையில் சந்தியா தன்னை காப்பாற்றக்கோரி சத்தம் எழுப்பியுள்ளார். ஆனால், உறவினர்கள் அருகில் இல்லாததால் பத்து நிமிடத்திற்கும் மேலாக சந்தியா சாக்கடை உள்ளேயே கதறிய நிலையில் அலறல் சத்தம் கேட்டு சந்தியாவின் உறவினர்கள் வந்து பார்த்தபோது, சந்தியா சாக்கடை கால்வாயில் மூழ்கிக் கிடந்துள்ளார்.

கர்ப்பிணியைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். இங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா உயிரிழந்தார்.

இது தொடர்பாக அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

இதுகுறித்து உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், வீட்டின் முன்பாக சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முறையாகப் பணிகள் நடைபெறவில்லை. சாக்கடை கால்வாயில் தண்ணீரை தேக்கி வைத்ததால் தான் கர்ப்பிணி பெண் விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்தனர். கால்வாயில் முறையாக கழிவு நீர் சென்று கொண்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும், பலமுறை கோரிக்கை வைத்தும் உள்ளாட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும் குற்றம்சாட்டினர்.

எனவே சாக்கடை கால்வாயில் ஆழம் அதிகமாக உள்ளதால், பாதுகாப்பிற்காக மேல் தடுப்பு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முன்பாக ஒரு முதியவர், இதே இடத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு குழந்தைகள் விழுந்து மீட்கப்பட்டுள்ளனர். இது இரண்டாவது உயிரிழப்பாக ஏற்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: நீட் தேர்வு அச்சத்தில் மாணவர் தற்கொலை!

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு; தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு!

இதையும் படிங்க: கலாஷேத்திராவில் பாலியல் புகார் - உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் ஆணையத்தலைவி உறுதி!

ABOUT THE AUTHOR

...view details