தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நானும் மதுரக்காரன் தாண்டா... ஆக்ரோஷமான பவரு! - சீனிவாசன்

சேலம்: சினிமாவில் குழந்தைகள் என்னை அதிகம் ரசிக்கிறார்கள் இதை நான் பயன்படுத்திக் கொள்வேன் என்று நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கலகலப்புடன் பேசியுள்ளார்.

சீனிவாசன்

By

Published : May 3, 2019, 1:36 PM IST

Updated : May 3, 2019, 1:51 PM IST

சேலத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த திரைப்பட நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசுக் கட்சியில் ஓராண்டுக்கு முன் சேர்ந்தேன். அதன் பேரில் மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜமானது. மக்கள் தீர்ப்பே இறுதியானது.

மக்கள் மத்தியில் எனக்கு வரவேற்பு உள்ளது. நான் டெபாசிட்டிற்கு மேல் ஓட்டு வாங்குவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் வெற்றிபெற்றால் மக்களுக்கு நல்லது செய்வேன்.

இதற்கு பிறகும் எனது அரசியல் பயணம் தொடரும், அரசியலில் அச்சுறுத்தல், மிரட்டல்கள் வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன். நான் பயப்பட மாட்டேன். ஏனென்றால் நான் மதுரக்காரன் என்றார்.

பவர் ஸ்டார் சீனிவாசன்

தொடர்ந்து பேசிய அவர், இணையதளத்தில் புதிய படங்கள் வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சினிமாவில் குழந்தைகள் என்னை அதிகம் ரசிக்கிறார்கள். 'பவர் ஸ்டார்' என்ற பெயருக்கும் மக்கள் மத்தியிலும் எனக்கு வரவேற்பு உள்ளது. இதை நான் பயன்படுத்திக் கொள்வேன் என்றும் கூறினார்

Last Updated : May 3, 2019, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details