தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

சேலம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பெண்கள், குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

popular front of india candle light protest against caa in salem
மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

By

Published : Jan 31, 2020, 7:47 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி சிலை முன்பு பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இதில், பெண்கள், குழந்தைகள் என 50க்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுவர்த்தி ஏந்தி குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகள்

முன்னதாக இந்த போராட்டத்திற்கு காவல் துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: பெண் வேட்பாளர் கையை கடித்த பாமக வேட்பாளர்!

ABOUT THE AUTHOR

...view details