தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் தைத்திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு வழங்குவது வழக்கம். பொங்கல் பரிசு அறிவித்ததைடுத்து பொங்கல் பரிசு எப்போதும் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவிவந்தது.
இந்தச் சூழலில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட இன்றுமுதல் 12ஆம் தேதிவரை பொங்கல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கிடைக்கும். முதலமைச்சர் பழனிசாமி மாவட்டமான சேலத்தில், இலங்கை தமிழர்கள் உள்பட ஒன்பது லட்சத்து 72 ஆயிரத்து 118 குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகளில் ஆயிரம் ரூபாயுடன், பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, இரண்டு அடிக்கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும்.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 577 நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு வழங்குவதில் ஏதேனும் முறைகேடு இருந்தால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை 04272 -451943 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம். இதில், மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
வனவிலங்கை வேட்டையாடிய ஐந்து இளைஞர்கள் கைது!
எட்டு லட்சத்து 60 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது. மின்னணு குடும்ப அட்டை தொலைந்துபோனால் குடும்ப நபர் ஒருவரின் ஆதார் அட்டையினை பயன்படுத்தியும், பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண் மூலமாகப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு