சேலம் மாவட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவருக்கு மனைவி முனியம்மாள் (45), மூன்று குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சாமிநாதன், தினமும் குடித்து விட்டு வந்த தகராறு செய்வது வழக்கம். இதனால் விரக்தியடைந்த முனியம்மாள், கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமண உறவிற்கு மீறிய காதலாக மாறியது.
மூன்று குழந்தைகளின் தாய் கழுத்தறுத்து கொலை; தகாத உறவால் விபரீதம்! - teenager
சேலம்: மூன்று குழந்தைகளின் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தப்பிச் சென்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையடுத்து முனியம்மாள் வீட்டில் செந்தில்குமார் நிரந்தரமாக தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று குடித்துவிட்டு வந்த செந்தில்குமார், முனியம்மாளிடம் தகராறு செய்துள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். ஆனாலும் இருவருக்கும் இரவு முழுவதும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செந்தில்குமார், கத்தியால் முனியம்மாளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் முனியம்மாளின் வீட்டு கதவு திறக்காததால், சந்தேகமடைந்த கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்த்தபோது முனியம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பின்னர் சடலத்தை கைப்பற்றிய கொண்டாலம்பட்டி காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து சாமிநாதனை தேடி வருகின்றனர்.