சேலத்தில் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த ஒலிப்பெருக்கி கொண்ட ஆட்டோ! - corona awareness auto in suramangalam salem
சேலம்: கரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, சேலம் மாநகர உதவி ஆணையர் நாகராஜன் ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோக்களின் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் பொதுமக்கள் இன்றும் சரியான விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் சேலம் காவல் துறை சார்பில் தொற்றைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க வலியுறுத்தும் வகையிலும் சேலம் மாநகர உதவி ஆணையர் நாகராஜன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் 'ஒலிப்பெருக்கி கொண்ட ஆட்டோக்கள்' பயணத்தைத் தொடக்கி வைத்தார்.
சூரமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தெருக்கள்தோறும், இந்த ஆட்டோக்கள் ஒலிப்பெருக்கி வாயிலாக கரோனா விழிப்புணர்வை தினந்தோறும் ஏற்படுத்தும் என நாகராஜன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஊரடங்கில் உணவின்றி தவித்த மக்கள் : ஒன்று திரண்டு உதவி இளைஞர்கள்!
TAGGED:
ஒலிபெருக்கி கொண்ட ஆட்டோ