சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், தலைமை காவலர் கணேஷ் ஆகியோர் ஏற்காடு மலை அடிவாரப் பகுதியில், கடந்த மாதம் 28ம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்காடு மலை அடிவார பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது ஆட்டோவை ஓட்டி வந்தார்.
ஆட்டோவை நிறுத்திய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், தலைமை காவலர் கணேஷ் ஆகியோர் பிரகாஷிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கேட்டுள்ளனர். இதற்கு ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், வண்டியில் ஆர்.சி. புத்தகம் இல்லை என்று கூறியுள்ளார். அப்போது தலைமை காவலர், 'உன் மீது மூன்று வழக்கு தற்போது போடப் போகிறேன், இதற்கு அபராதம் கட்ட வேண்டும்' என ஆட்டோ ஓட்டுநரிடம் மிரட்டும் தொணியில் தெரிவித்திருக்கிறார். அதற்கு, ஆட்டோ ஓட்டுநர், 'நான் நீதிமன்றத்தில் அபராதத் தொகையை செலுத்துகிறேன் எனக்கூறி, ஆட்டோவை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.900 லஞ்சமாக வேண்டும் என தலைமைக் காவலர் கேட்டுள்ளார்.