தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி கடத்தல்: 48 மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்த போலீஸுக்கு குவியும் பாராட்டு! - சேலம் சிறுமி கடத்தல்

சேலம்: ரேஷன் கடைக்குச் சென்ற சிறுமியைக் கடத்தி கட்டாயத் திருமணம் செய்த இளைஞரை, 48 மணி நேரத்தில் சிறையில் அடைத்த தீவட்டிப்பட்டி காவல் துறையினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

salem

By

Published : Nov 14, 2019, 6:14 PM IST

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி 2 தினங்களுக்கு முன் ரேஷன் கடைக்கு அரிசி வாங்கச் சென்றுள்ளார். கடைக்குச் சென்ற சிறுமி பல மணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் பயந்துபோன பெற்றோர், அவரது மகள் காணாமல் போனது குறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில், காடையாம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இதனடிப்படையில் காவல் துறையினர் சேலம், ஓமலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, சிறுமியை ஹோட்டல் ஒன்றில் அடைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த கோவிந்தராஜைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமி ரேஷன் அரிசி வாங்கக் கடைக்குச் சென்றபோது, அவரின் வாயில் துணியை அடைத்து, மிரட்டி, கடத்திச் சென்றதாகத் தெரியவந்தது.

மேலும், சிறுமியைக் கட்டாயப்படுத்தி கழுத்தில் தாலி கட்டிய கோவிந்தராஜ், அவரை பாலியல் வன்புணர்வு செய்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிறுமி கடத்திய இளைஞரை 48 மணி நேரத்தில் மடக்கிய காவல் துறையினர்

இதன் அடிப்படையில், கோவிந்தராஜன் மீது தீவட்டிப்பட்டி காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். சிறுமியைக் கடக்திச் சென்ற இளைஞரை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்து சிறையில் அடைத்த, தீவட்டிப்பட்டி காவல் துறையினருக்கு சிறுமியின் உறவினர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படிங்க : சரவணா ஸ்டோர் மேனேஜரிடம் கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய ஒன்பது பேர்!

ABOUT THE AUTHOR

...view details