சேலம் மாவட்டம், தாரமங்கலம் பேருந்து நிலையம் அருகே அர்த்தநாரீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் இருக்கிறது. வெளியூர் செல்ல பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள், இந்த தெப்பக்குளத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் ஆண் சடலம் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக தாரமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபரின் சடலம் கோயில் குளத்திற்கு எப்படி வந்தது என்றும், கொலையா? தற்கொலையா என்பது பற்றியும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கடந்த வாரம் தைப்பூசம் தொடங்கி நடைபெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழாவின் மூன்றாம் நாள் இரவு, இருபிரிவினரிடையே கடுமையான வன்முறை மோதல் ஏற்படவே, அப்போதிருந்து காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
கோயில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மீட்பு இதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு, கோயில் தெப்பக்குளத்தில் தெப்பத் தேர் விழா நடைபெற்றது. இந்நிலையில் கோயில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தாரமங்கலம் பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இளம்பெண் என நினைத்து மூதாட்டியிடம் அத்துமீறிய போதை ஆசாமி!