கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அளித்துள்ள மத்திய, மாநில அரசுகள் அண்மையில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதித்தது. இதையடுத்து, ஏழை எளிய மக்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு நடந்தே சென்று வருகின்றனர். பொதுப் போக்குவரத்து கடந்த 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டதால், பொதுமக்கள் இருசக்கர வாகனத்திலேயே அதிக தூரம் பயணிக்க நேர்ந்துள்ளது.
அதேபோல இருசக்கர வாகனங்களில் வருவோர் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு காவல் துறை, சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளன. மேலும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருவோருக்கு 100 ரூபாய் அபராதம் சேலம் மாவட்டத்தில் விதிக்கப்பட்டு வருகிறது.