தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் மற்றும் மகனின் ரகசியத்தோழி மீது போலீசார் வழக்குப்பதிவு! - முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் மற்றும்

முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் கொடுத்தப் புகாரின் பேரில், மகன் பிரபு திலக் மற்றும் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்த தோழி இந்திரா பிரியதர்ஷினி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 17, 2023, 4:32 PM IST

Updated : Jun 17, 2023, 7:25 PM IST

சேலம்:சேலத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர், சுருதி. இவருக்கும் முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் பிரபு திலக்கிற்கும் கடந்த 2007ஆம் ஆண்டு சேலத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் 8 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவரான பிரபு திலக் தன்னுடன் மருத்துவராகப் பணியாற்றிய சேலத்தைச் சேர்ந்த இந்திரா பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். இதனையறிந்து அதனைத் தட்டி கேட்ட, தனது மனைவியைத் தாக்கி, பிரபு திலக் மற்றும் அவரின் தோழி இந்திரா பிரியதர்ஷினி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சுருதி, சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் புகார் அளித்தார். அதில், ’எனக்கும் முன்னாள் டி.ஜி.பி திலகவதியின் மகன் பிரபு திலக் என்பவருக்கும், 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது, வரதட்சணையாக ஒரு கோடி ரூபாய் ரொக்கமும், 170 சவரன் நகையும் என் தந்தை வழங்கி இருந்தார். எங்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். சமீபகாலமாக, என் கணவர் என்னை காரணமின்றி அடிப்பதும் துன்புறுத்துவதுமாய் இருந்து வருகிறார். கேட்டால் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்துகிறார்.

என் கணவர் பிரபு திலக், சேலத்தில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. தினமும் மது அருந்திவிட்டு என்னை அடித்து சித்ரவதை செய்து வந்தார். எங்களது குழந்தைகளுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்.

என் கணவரின் அம்மா ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்ததால், எப்போதும் என்னை மிரட்டி, "உன்னுடைய வாழ்க்கையை அழித்து விடுவோம்" என்று கூறி கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இந்த நிலையில், அவர் தன்னுடன் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவருடன் கடந்த சில ஆண்டுகளாக, திருமணத்தை மீறிய உறவில் உள்ளார்.

இதுகுறித்து எனக்குத் தெரியவந்தது. உடனே அது பற்றி நான் கேட்டபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால், என் உயிருக்கு ஆபத்து இருந்து வருகிறது. எனவே, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்தப் புகாரின் மேல் சேலம் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கறிஞர் சுருதி, சென்னையில் தங்கி தனது நீதிமன்றப் பணிகளை கவனித்து வருகிறார். இதனிடையே, சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் கடந்த ஆண்டு (25.10.2022) பிரபு திலக் மற்றும் அவரின் தோழி இந்திரா பிரியதர்ஷினி இருவரும் இருந்ததை கண்ட வழக்கறிஞர் வழக்கறிஞர் சுருதி, கணவரிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் சேர்ந்து சுருதியையும் அவரின் பெற்றோரையும் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக, வழக்குரைஞர் சுருதி வி5 திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆனால், அந்தப் புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்காத காரணத்தால், சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை வழக்குரைஞர் சுருதி நாடினார். இதனையடுத்து சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய வி5 திருமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, கடந்த ஜூன் 7ஆம் தேதி அன்று, திருமங்கலம் போலீசார் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தாலிச் செயினை பறித்து தப்பிய திருடனை 1 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்... சமூக வலைதளத்தில் குவியும் பாராட்டு

Last Updated : Jun 17, 2023, 7:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details