சேலம்: பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி செந்தில். இவர், கரோனாவை ஒன்றிய, மாநில அரசுகள் ஒழிக்க முடியாது. என்னால் 15 நாள்களில் ஒழிக்க முடியும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, நான்கு ரோடு அண்ணா பூங்கா எதிரே உள்ள 100 அடி உயர டவர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், தீயணைப்பு துறை உதவியோடு ரகளையில் ஈடுபட்டவரை பத்திரமாக மீட்டனர்.