சேலம் மாநகராட்சி பள்ளப்பட்டி பகுதியில் உள்ளது சாமிநாதபுரம். இங்கு செல்வம் பாத்திரக் கடை உள்ளது. இங்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த 50 வயது பெண் பாத்திரக் கடையில் பாத்திரங்கள் வாங்குவது போல நடித்து ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள கோயில் கட்டும் பித்தளை மணியை திருடிச் சென்றுள்ளார்.
பாத்திரக் கடையில் மணியை மறைத்து எடுத்துச் சென்ற பெண் கைது!
சேலம்: பாத்திரக்கடையில் கோயிலில் கட்டும் மணியை மறைத்து எடுத்துச் சென்ற பெண்ணை சிசிடிவி கேமரா மூலம் காவல் துறையினர் கைது செய்தனர்.
அன்று இரவு கடை உரிமையாளர் சிசிடிவி கேமராவை பார்த்தபோது பெண் ஒருவர் மணியை திருடிச் செல்லும் காட்சியும் பதிவாகி இருப்பதைக் கண்டுள்ளார். பின்னர் இது குறித்து கடை உரிமையாளர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் பெரமனூர் பகுதியைச் சேர்ந்த பாக்கியம் என்ற பெண்ணை கைது செய்தனர். இதையடுத்து பாக்கியத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் கிளைச் சிறையில் அடைத்தனர்.