சேலம் மாவட்டம் சங்ககிரி சின்னகவுண்டனூர் அருகேயுள்ள கலியனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கார்த்திகேயன். இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல் கார்த்திகேயனின் தோட்டத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க அலுவலர்கள் அளவீடு செய்துள்ளனர். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கார்த்திகேயன், சேலம் மாவட்ட செயலாளர் எ.ராமமூர்த்தி, நாமக்கல் மாவட்ட விவசாய சங்க செயலாளர் பெருமாள், மற்றும் ராஜேந்திரன், பழனிசாமி உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் என 13 பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - வலுக்கட்டாயமாக 13 விவசாயிகள் கைது
சேலம்: சங்ககிரி அருகே உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த 13 விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
protest
விளைநிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு ஒப்புதல் வழங்கிய பின்பே உயர் மின்னழுத்த கோபுர பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு இருந்துவருகிறது. ஆனால் அதனை மதிக்காமல் விளைநிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரங்களை அமைப்பதற்காக விவசாயிகளை தாக்கி அராஜக செயலில் ஈடுபட்டுவரும் அலுவலர்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.