தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராணுவ வீரரை கைது செய்து துன்புறுத்தும் காவல்துறையினர்!

சேலம் : மேச்சேரி காவல் நிலையத்தில் முறையான புகார்கள் இல்லாமல் ராணுவ வீரரை கைது செய்து அடித்து துன்புறுத்துவதாக அவரின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ராணுவ வீரரை கைது செய்து துன்புறுத்தும் காவல்துறையினர்!

By

Published : Aug 4, 2019, 3:33 AM IST

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், கடந்த 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்ற வாரம் ஊருக்கு திரும்பி வந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மேச்சேரி பேருந்து நிலையத்தில் அவருக்கும், காவலர்கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது.

இதனை அடுத்து ராணுவ வீரரை கைது செய்த காவல்துறையினர், மேச்சேரி காவல் நிலையத்தில் வைத்து இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, தகவலை கேள்விப்பட்ட தர்மராஜின் உறவினர்கள் மேச்சேரி காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்து உள்ளனர். ஆனால் அவர்களையும் போலீசார் தாக்கி காவல் நிலையத்தை விட்டு விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது .

ராணுவ வீரரை கைது செய்து துன்புறுத்தும் காவல்துறையினர்!
இந்த நிலையில் இரவு முழுவதும் காவல்துறையினரால் அடித்து துன்புறுத்தப்பட்ட ராணுவ வீரர் தர்மராஜை மீட்டுத்தருமாறு அவரின் தாயார் பழனியம்மாள், சகோதரி கற்பகம், சகோதரன் சக்திவேல் ஆகிய மூவரும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details