தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்து பெண்ணிடம் செயின் பறிப்பு! - அஸ்தம்பட்டி

சேலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்து சாக்லேட் கொடுத்து, பெண்ணிடம் செயின் பறித்து சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்து பெண்ணிடம் செயின் பறிப்பு
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்து பெண்ணிடம் செயின் பறிப்பு

By

Published : Dec 6, 2022, 10:44 PM IST

சேலம்: அஸ்தம்பட்டி டிவிஎஸ் காலனி பகுதியைச் சேர்ந்த பொன்ராணி என்பவர் நேற்று இரவு தனது வீட்டிலிருந்துள்ளார். அப்பொழுது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்த நபர் ஒருவர், தெருவில் நின்ற நபர்களுக்கு சாக்லேட் கொடுத்தபடி வந்துள்ளார். இதைக்கண்ட பொன்ராணியும் வீட்டுவாசலில் நின்று கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அந்த நபர் பொன்ராணிக்கும் சாக்லேட் கொடுத்துள்ளார். சாக்லேட்டை வாங்கியபோது கண்ணிமைக்கும் நேரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்த நபர், பொன்ராணி கழுத்தில் அணிந்திருந்த 6 1/2 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடியதாக கூறப்படுகிறது.

உடனே பொன்ராணி சத்தம் எழுப்பிய நிலையில், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால், அதற்குள் அந்தநபர் அங்கிருந்து மாயமாகிவிட்டார். இதுகுறித்து பொன்ராணி அளித்தப் புகாரின் பேரில் அஸ்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:போதையில் பள்ளியை சேதப்படுத்திய கல்லூரி மாணவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details