தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரும்புத் தோட்டத்தை தீ வைத்து கொளுத்திய பாமக பிரமுகர் - கரும்பு தோட்டம்

சேலம் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து விவசாய நிலத்தை அபகரித்த பாமக பிரமுகர் , கரும்புத் தோட்டத்தை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரும்பு தோட்டத்தை தீ வைப்பு
கரும்பு தோட்டத்தை தீ வைப்பு

By

Published : Jan 23, 2022, 1:27 PM IST

சேலம்:கருப்பூர் அருகேவுள்ள மேட்டுப்பதி காட்டுவளவு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்துசாமி, மாதம்மாள் தம்பதி.

இவர்களுக்கு 85 சென்ட் விவசாய நிலம் உள்ளது. 1970ஆம் ஆண்டு முதல் அதில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேவுள்ள தட்டான்சாவடி பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் சரவணன், மணியனூர் சண்முகம், சின்னசீரகாபாடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் ஆகிய மூன்று பேரும் போலி ஆவணம் தயாரித்து, முத்துசாமி - மாதம்மாள் தம்பதியின் நிலத்தை அபகரித்து தங்களது பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து இவர்கள் நாள்தோறும் , முத்துசாமி-மாதம்மாள் விவசாயி குடும்பத்தினருக்கு பல்வேறு தொந்தரவுகளையும் கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்தனர்.

கடந்த சில தினங்களாக அவர்கள் அடியாட்களுடன் சென்று, பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பயிர்களை சேதப்படுத்தியும், பயங்கர ஆயுதங்களுடன் முத்துசாமி, மாதம்மாள் அவர்களின் உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வந்துள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தினர் சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று (ஜன 23) காலை பாமக பிரமுகர் சரவணன், செல்வராஜ், சண்முகம் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு பத்துக்கும் மேற்பட்ட அடியாட்களுடன் முத்துசாமியின் கரும்புத்தோட்டத்திற்குள் புகுந்து கரும்புகளை சேதப்படுத்தி, தீ வைத்துச் சென்றனர்.

தீ மளமளவென பரவி கரும்புத்தோட்டம் முழுவதும் எரிந்தது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தினர் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட முத்துசாமி மாதம்மாள் குடும்பத்தினர் கூறுகையில், 'கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம். திடீரென பாமகவைச் சேர்ந்த சரவணன், செல்வராஜ், சண்முகம் உள்ளிட்ட 3 பேர் போலி ஆவணம் தயாரித்து நிலம் எங்களது என்று எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

கரும்புத் தோட்டத்துக்கு தீ வைப்பு

தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் விவசாய நிலத்தையும், எங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை’ என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

விவசாயிகளைப் பாதுகாப்பதாக கூறும் முதலமைச்சர் இந்த விவசாய குடும்பத்தையும் பாதுகாத்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:செல்போன் திருட்டு - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

ABOUT THE AUTHOR

...view details