மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், வன்னியர் சங்கத் தலைவருமான ஜெ. குருவின் 59ஆவது பிறந்த நாள் விழா சேலம் மேற்கு மாவட்ட பாமக சார்பில் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, சேலம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட 11 ஒன்றியங்கள் மூன்று பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 59 இடங்களில் பாமக கொடியேற்று விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பாமக மாநில துணை பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கண்ணையன் கலந்துகொண்டு பாமக கொடியை ஏற்றி வைத்தார். இதில், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் மருத்துவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெ. குருவின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.