சேலம் மாவட்டம் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேலம் மேற்கு மாவட்ட பசுமைத் தாயகமும் சுரக்ஸா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொதுமருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
இதில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்தார். இந்த முகாமில், எலும்பு முறிவு, மூட்டு பரிசோதனைகள், கர்ப்பப்பை, சிறுநீரகக் கல், மூட்டு வலி உள்ளிட்ட நோய்களுக்கான சிறப்பு பரிசோதனைகள் பார்க்கப்பட்டன. மேலும், கண்பார்வை குறைபாடு, தூரப்பார்வை, கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. மணி கூறுகையில், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு திமுக ஒரு இடம்கூட கொடுக்கவில்லை என அழகிரி பகிரங்கமாகப் பேட்டியளித்த காரணமாக அக்கூட்டணியில் பிளவு என ஊடகங்களில் வெளியானது.
இதைத்தொடர்ந்து அதை மறைக்க அழகிரி, ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றது. கூட்டணி தர்மம் என்பது பெரிய கட்சி, சிறிய கட்சி என்று பாகுபாடு பார்க்கக் கூடாது. பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் இதுவே கூட்டணி தர்மம். ஸ்டாலினை சந்தித்த அழகிரி பேட்டியளித்தது குறித்து எண்ணிப்பார்க்கும்போது கூட்டணி தர்மம் திமுகவிற்கு இல்லை என்பது தெரிகிறது.