தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை என முப்படைகள் உருவாக்கி செயல்படுத்தப்படும்' : பாமக முடிவு! - PMK cadres Meeting

சேலம்: பாட்டாளி மக்கள் கட்சியில் தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை என்று முப்படைகள் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று சேலம் மாவட்ட பாமக பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

pmk-general-cadres-meeting-in-salem
pmk-general-cadres-meeting-in-salem

By

Published : Nov 28, 2019, 8:39 AM IST

Updated : Nov 28, 2019, 9:13 AM IST

சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக தலைவர் ஜி.கே.மணி, பாமக மாநில துணை பொதுச் செயலாளர் இரா. அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற செய்திட வேண்டும், வரும் 2020 ஜனவரி 4இல் பூம்புகார் பகுதியில் நடைபெற உள்ள வன்னிய மகளிர் பெருவிழாவிற்கு சேலத்தில் இருந்து 10 ஆயிரம் பேரை அழைத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை என்று முப்படைகள் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாமக பொதுக் குழு கூட்டம்

பின்னர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, மதுரை, கடலூர் ஆகிய பெரிய மாவட்டங்களை பிரித்து மேலும் பல புதிய மாவட்டங்களை உருவாக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன் வர வேண்டும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராமதாஸ் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவரை கைது செய்த சைபர் க்ரைம்!

Last Updated : Nov 28, 2019, 9:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details