தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு பிரதமர் இந்தாண்டே நிதி ஒதுக்க வேண்டும்' - 'காவிரி - கோதாவரி' இணைப்பு

சேலம்: காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு பிரதமர் மோடி இந்தாண்டே நிதி ஒதுக்க வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே. மணி வலியுறுத்தினார்.

gkmani
gkmani

By

Published : Feb 18, 2020, 9:56 PM IST

சேலம் மாவட்டம் தனியார் உணவக விடுதி ஒன்றில், மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட ஜி.கே. மணி பின்னர் செய்தியாளர்களிடம், "தமிழ்நாட்டில் வறட்சியைப் போக்குவதற்கும் நீராதாரத்தைப் பெருக்குவதற்கும் காவிரி-கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

ஜி.கே. மணி செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் போர்க்கால அடிப்படையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். அதேபோல் மத்திய அரசு, இத்திட்டத்திற்கு உடனடியாக இந்தாண்டே நிதி ஒதுக்க வேண்டும் என பாமக சார்பில் வலியுறுத்துகிறேன்" என்றார்.

இதையும் படிங்க:'மக்கள் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details